-சாக்ய மோஹன்-
(எங்கேயடா தமிழ் உணர்வு எம் பெண்கள் தமிழர்களால் சூறையாடப் படும்போது எங்கேயடா தமிழ் தேசியம்? இனியாவது திருந்துங்கள் தமிழ் தேசியம் பேசும் தலித்களே! ஜாதி ஒழிப்பும் தீண்டாமை ஒழிப்பும் தான் நமது அடுத்த நூற்றாண்டுக்கும் போராட்டக்கருவேயொழிய தமிழ் தேசியம் அல்ல. தமிழ் தேசியம் பேசி ஏற்கனவே ஒரு இருளர் சமூக பெண்ணை கொலை வாங்கிய தமிழ் தேசியம் இன்று தமிழர் போலிசால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை தடுக்க முடிந்ததா? இன்று பழங்குடிகள் தொடர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்; இதை தடுக்க முடிந்ததா செங்கொடியின் தியாகம்? இது தான் நடைமுறை. சூத்திர ஜாதிகளை எதிர்ப்பதற்கு தமிழ் தேசியம் ஆயுதம் அல்ல. புரட்சியாளர் அம்பேத்கரியமே சூத்திரர் ஜாதி வெறியை ஒழிக்கக் கூடிய ஆயுதம். சிந்தியுங்கள் சகோதரர்களே! எந்த "மாவீரன்" போற்றுதலும் சூத்திரர்க்கு வலு சேர்க்குமேயொழிய, தலித் குடிகளை வலுவடையச் செய்யாது. மாறாக, தலித் மற்றும் பழங்குடி சமூகத்தை மேலும் ஒடுக்கக்கூடியதாகவே தமிழ் தேசிய அரசியல் அமைய முடியும். செங்கொடியை இழந்த சோகத்தோடு தமிழ் போலிசால் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்கள் சோகமும் உங்கள் "மாவீரன்" விழாவுக்கு அணி சேர்க்கட்டும் நாம் இன்னும் அடிமை விலங்கை உடைக்காமல் எந்த மசுரு தேசியமும் நம் பெண்களை காப்பாற்றாது எனும் உண்மையையும் உள்வாங்கியபடி!)
ஒரு உயிரை கொல்பவன் கொலைக்காரன்
சில உயிரைக் கொல்பவன் கொடூரன்
ஆயிரம் உயிரை கொல்பவன் மாவீரன்
பல்லாயிரம் உயிர்களை கொல்பவன் பெயர் என்ன?
தமிழ் இனவாதம் கொலைவாங்கிய
தலித் குடிகள் எத்தனை ஆயிரம்?
எண்ணமுடியுமா?
சிங்களன் கொன்றால் இனக்கொலை
புலிகள் கொன்றால் மஹா வீரம்
இதனால் புலித் தலைவன் மாவீரன்!
எனில் இடைக்காலத்தில்
இரு எண்ணாயிரம் பேரை
கழுவேற்றி கொலைப்பாதகம் செய்த
ஞானசம்பந்தன் மாவீரனா?
அவன் பாடியது புத்தக் குடிகளை கொன்ற
போர் பரணியா?
எனக்கென்னவோ
புலித்தலைவன் பிரபாகரன்
நவ தமிழ் ஞானசம்பந்தனோ?
எனும் கேள்வியை
சிறுத்தைகள் தலைவருக்கு கேட்கத் தோன்றுகிறது!
புலிகளின் கொலை ஆயுதமாய்
தலித் குடிகளே மனித வெடிகுண்டுகளாய்
மற்ற வெள்ளாள சிவனிய ஜாதிப் புலிகள் யாவும்
மனிதவெடி தயாரிப்பு இயக்க வேலைகளைப் பார்த்திருப்பது
தெரியாதா சிறுத்தை தலைவருக்கு?
சிறுத்தைகள் புலிகளுக்கு எடுக்கும்
நினைவேந்தல் விழா
சிதைந்த மனிதப் பிணத்தின் மீது
நடந்து பழகிய புலிநகத்தை கழுத்தில் கட்டியபடி!
பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கிய
சிதைந்த மனிதப் பிணத்தின் மீது
நடந்து பழகிய புலிநகத்தை கழுத்தில் கட்டியபடி!
பல்லாயிரம் உயிர்களை பலிவாங்கிய
மனிதத்தின்னிகளுக்கு பரணி பாடியபடி...
கால்களில் தமிழர் பூட்டிய
தீண்டாமை விலங்கை முறிப்பதற்கு
செத்த புலியின் கோரைப் பல்லையும்
கழுத்தில் மாட்டிக்கொள்ளும் மூட நம்பிக்கை
தலித் குடிகளையும் விட்டுவைக்கவில்லை!
என்ன செய்வது போதி நாதனே!
துன்பத்திற்கான காரணம் தெரிந்தும்
துன்பத்தையே நுகர்ந்து வாழும்
கழிவிரக்கக்காரரை என்சொல்லி விளக்குவேன்?
தீண்டாமை தீவினை விளைத்த
மனிதத்தின்னிகளின் வினைப் பயன்
தீண்டாதார் மேலேயே வீழ்கிறதோ?
எமது விடுதலை வரலாற்றில் - இந்த
மனிதத்தின்னிகளும் பிணந்தின்னிகளும்
இடம் பிடிப்பாரோ?
காரணம் இன்றி எவ்வினையும் இல்லை
எனும் விஞ்ஞானம் போதித்த
எமது சாக்கிய மஹா நிப்பானனே!
மனிதத்தின்னியும் மாவீரன் ஆவதுவோ?
No comments:
Post a Comment