Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Wednesday, March 7, 2012

கீற்று செய்தியோடையில் செத்த புலிகளின் வேட்கை!

-சாக்ய மோஹன்-

வானுயர் மர வனங்களை
தமது இனவெறி கோரைப் பற்களால் சாய்த்ததோடு
ஆயிரமாயிரம் உயிர்பலி வாங்கிய பின்
இணைய தளங்களில் இனவெறியாக வழியும்
கீற்று செய்தியோடையில்
ரத்தம் குடிக்கும்
செத்துப்போன
குரோத மனிதத்தின்னி புலிகள்!
இனவெறி சாக்கடையில்
வழிந்தோடுகிறது கீற்று செய்தியோடை


கருத்துச் சுதந்திரம் தனக்கு மட்டுமே என
புத்த சாக்யதேர-ஹீனரின்
தம்மதேசத்தில் மடிந்துபோன புலிவாதம் போல்!
சிங்கள இனவெறி என
கிழியும் மொழிவாய்களை
கொடும் புலிகளின்
கோரைப்பற்கள் மட்டுமே நிரப்பியதாய்
நிரம்பி வழிகிறது கீற்று செய்தியோடை!

ஈழம் எனும் முடிந்துபோன
ஹிந்து பாசிச புலிக்கனவு
கீற்று இணையத்தின் புலி பங்காளிகளுக்கு
மீண்டும் வருகிறதாம்!

ஜாதியத்தின் அத்தனை கொடூரத்திலும்
ஐக்கியம் ஆயிருந்த புலிகளின் கனவு இல்லமாக
உருவெடுக்கும் கீற்று இணையத்தை
புலி-தேசிய வெறி முற்றுகை!

ஈழம் எனும் இல்லாத தேசத்தில்
இம்சைக்குள் இழிக்கப்பட்ட
தலித் குடிகள் எழுச்சி கண்டது
மனிதத்தின்னிகள் மண்மேடிட்டபோதுதான்!

ஈழம் எனும் இல்லாத தேசத்தில்
மெய்யாய் குடிகொண்டது
சைவ ஜாதி மட்டுமே!
இதில் எந்த ஜாதி-எதிர்ப்பும்
தீண்டாமை-எதிர்ப்பும்
புலிகளின் ஹிந்தத்வத்தை
கேள்விக்குள் நிறுத்த முடியாது!

இலங்கை பறைச்சேரியில்
கேள்வி கேட்ட தலித் தலைவர்கள்
குப்பியர் புலிகளால் கொலையுண்டது
மட்டுமே தமிழ்தேசியம்!

இலங்கை தமிழ் ஊர்கள் வினைத்த
தீண்டாமைக் கொடுமைகளும்
ஜாதி-எதிர்ப்பில் தீமூண்ட நாட்களும்
கீற்று செய்தியரின் புலித்தேசியத்தை
உடைக்க வல்லதுவோ?
அதுதான் கீற்றின் வழி நெடுக
புலி-எதிர்ப்பு ஜனநாயக கண்ணிகளோ?

கீற்று இணையம்
செத்த புலிகளின் பேர்சொல்லி
இனப்பால் ஊட்டி
இன்னொரு பயங்கரவாத்தை
உள்ளிழுத்து மூர்க்கம் கொள்கிறது!

கீற்று செய்தி ஓடையில்
செத்துப்போன புலிகள்
இனதாகம் தீர்க்க
நீர் அருந்த வருகின்றன!
ஆனால் காய்த்த ரத்தம் மட்டுமே
கீற்று ஓடையில் உறைந்திருக்கிறது
புலிநக சக்கைகளுடன்!

No comments:

Post a Comment