-சாக்ய மோஹன்-
பாதை வலிக்காமல் நடந்தாலும்
நாய்கள் குரைக்காமல் விடுவதில்லை
என நான் எழுதியது சரிதான்!
கொட்டிப்போகும் வெற்றிலைகள்
சிறு காற்றுக்கும் மேலே பறந்து
எங்காவது திரிந்து பின் சாக்கடைகளிலும் வீழ்ந்து நாறும்
எம் குலகுரு போதிநாதனுக்கே
நேர்ந்த துருவாய்வழி அவதூறு ஆயிரம்
நாம் என்ன அவர் வழியில் நிற்கும் தம்மிகள் தானே!
சில பல நரிகள்
சூத்திரம் பேசும்!
பல சில கழுதை-புலிகள்
சிங்கங்கள் தின்று மிச்சம் வைத்த
மீந்துபோன நாற்ற எலும்பை கடித்த வெறுப்பில்
மற்ற உயிர்களுக்கு வீணாய் துன்பம் விளைவிக்கும்!
போதி நாதனே!
ஜாதி-எதிர்ப்பில் தீண்டாமை பட்டம்பெற்ற
எமது ஹீனத்தேரப் பறையருக்கு
நேர்ந்த துன்பம் இதுதான் எனத் தெரிந்தும்
இல்லை எனச் சொல்லும்
அறியாமை இருள் கூகைகளை என் சொல்வதோ?
No comments:
Post a Comment