Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Wednesday, March 7, 2012

"திரிக்குறள்" மீட்பால் நம் வரலாறு மீளும்

பரிமேலழகர் மற்றும் உ. வெ. சாமிநாதர் போன்ற போலி "தமிழ் ஜாதி தாத்தா"க்களால் "வள்ளுவ பறையர்" எனச் சுருக்கப்பட்ட களபறையர் புத்த தம்ம காலத்து சாக்ய பேரறிஞர் போதிசத்துவர் நிலை அடைந்த திருவள்ளுவர் தமிழில் வழங்கிய "திரிக்குறள்" எனும் பதினெண் கீழ்கணக்கு நூல், பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுவது போல், "உலகு புகழ் அறிய திரிபேத வாக்கியங்கள் என்றும், திரிபீட வாக்கியங்கள் என்றும் வழங்கிய மூவருமொழியாம் முதல் நூலுக்கு வழி நூலாகத் தோன்றியவை திரிக்குறளும், சார்பு நூலாக தோன்றியவைகள் திரிமந்திரம், திரிவாசகம், திருவெண்பா, திருமாலை, திரிகடுகம், சித்தர்கள் நூல் முதலியவைகள் ஆகும்."நமது பாட்டன் அறிவுச் சொத்தை எல்லாம் நம்மிடம் இருந்து பிடுங்கி தமதாக்கிக்கொள்ளும் தமிழர் ஜாதிகளுக்கு பண்டிதர் கூறும் செய்திகள் அதிர்ச்சியாகவும் இருக்கும்.

"இத்திரிக்குறளுக்கு "திரு"வென்னும் அடைமொழி சேர்த்துத் "திரு"க்குறள் என சிறப்பு வழங்கினும் தன்ம பிடக, சுத்த பிடக, வினைய பிடக என்னும் மகட பாஷா முதல் நூலுக்கு திராவிட பாஷா வழி நூலாம் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் திரிக்குறளே உடன்பாடாதலின்" திருவென்னும் அடை மொழி சிறப்பாயினும், தமிழியப்படுத்துதலின் பொருட்டு சைவ ஜாதிகள் செய்த இருட்டடிப்பாகவே இன்றைய நிலையில்" சாக்ய குடிகளின் பூர்வ சொத்து களவாடப்பட்டு "திருக்குறள்" என வழங்கப்பட்டு வருகிறது. நாம் இந்த போதி அறிவுப் பொக்கிஷத்தை நமதென்று அறிவிக்க இதன் மூலப் பெயரான "திரிக்குறள்" எனும் பெயரை மீண்டும் மீட்க வேண்டும் இதன் வழி இந்த திரிபிடகத்தின் வழிநூலை மீட்கும் நிலையில், நமது அறிவாற்றல் மிக்க சமூகம் ஏன் தாழ்த்தப்பட்ட சமூகம் என ஆக்கப்பட்டது என்பதை இந்த ஜாதிகளுக்கு விளக்கலாம். விவரம் அறிய பண்டிதமணி அயோத்திதாசரின் "தமிழன்" பத்திரிக்கையை அடியொற்றி வெளியிடப்பட்ட "அயோத்திதாசர் சிந்தனைகள்" தொகுப்புகளை படியுங்கள்.

11 comments:

  1. அயோத்திதாசர் சிந்தனைகள் எல்லாம் சரி ஆனால் வள்ளுவன் திருவள்ளுவர் எல்லாம் எப்போது வள்ளுவ பரையரானார்கள் பட்டியலினத்தவர் சரி வள்ளுவர்கள் வேறு பரையர்கள் வேறு எந்தஇடங்களிலும் வள்ளுவ பரையர் என்ற இனம் இல்லை புரிகிறதா நண்பரே....

    ReplyDelete
  2. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று போராட்டம் நடத்துகின்றார்கள்?? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  3. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று போராட்டம் நடத்துகின்றார்கள்?? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  4. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  5. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில் அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  6. திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் பக் ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை.

    ReplyDelete
  7. வள்ளுவர்கள் வேறு பரையர்கள் வேறா ஓரு ஆதாரம் காட்ட முடியுமா தம்பி

    ReplyDelete
  8. திருக்குரளை எழுதியது திருவள்ளுவர் என்ற நபர் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. அனால் திரு வள்ளுவர் என்றழைக்க காரணம் அவர் வள்ளுவர் இனத்தை சார்ந்தவர் என்பதால். திருக்குரளை 1000 வருடங்களாக கட்டி காப்பாற்றி வருபவர்கள் வள்ளுவ பறையர்கள். இன்னமும் தமிழகத்தில் வள்ளுவ பறையர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது போன்றவற்றில் புலமை பெற்றிருந்தனர். வள்ளுவர் என்ற பெயரோ பட்டமோ இந்திய நிலப்பரப்பில் வேறு எந்த சாதிக்கும் இல்லை என்பது இங்கே குறிப்பிடப்பட விரும்புகின்றேன். சமகாலத்தில் நம்மிடம் இருக்கும் திருக்குரளை அளித்தவர் அயோத்தி தாச பண்டிதரின் குடும்பம். அவர் பறையர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிபீடியா வலைத்தளம் ஆதாரங்கள் இல்லாது எதையும் பதியாது.

    பறையர் பற்றி ஆய்வு செய்த மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் தமது கீழ் உள்ள புத்தகங்களில் திருவள்ளுவரும் ஒளவையாரும் பறையர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு திருவள்ளுவரையும் ஒளவையாரையும் இந்த பக்கத்தில் சேர்க்கின்றேன்.


    நூல் ஆதாரம் 01- : “Wikipedia, The Free Encyclopedia” (விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம்)

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து - விக்கிபீடியா வலைத்தளம் (wikipedia.org) ஆதாரங்கள் இல்லாது எதையும் பதியாது என்பது அறிவு கூறும் நல்லுலகம் அறிந்த விடையம் இதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    “...Edgar Thurston (1855-1935), for example, claimed that their status was nearly equal to that of the Brahmins in the past. H. A. Stuart, in his Census Report of 1891, claimed that Valluvans were a priestly class among the Paraiyars, and served as priests during Pallava reign. Robert Caldwell, J. H. A. Tremenheere and Edward Jewitt Robinson claimed that the ancient poet-philosopher Thiruvalluvar was a Paraiyar … “

    தமிழாக்கம் : “ஒரு காலகலத்தில் பறையர்களின் தகுதி பிராமணர்களுக்கு சரிசமமாக இருந்து”
    (எட்கர் தர்ஸ்டன் மானிடவியல் அறிஞர் (Anthropology)

    “வள்ளுவர்கள் (பறையர் பூசகர்கள்) பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர்”
    (எச் ஏ ஸ்டுவர்ட், 1891இன் அவரது குடிசன மதிப்பு அறிக்கையில் )

    “திருக்குறளை எழுதிய பண்டைய தமிழ் தத்துவவாதி திருவள்ளுவர் ஒரு பறையர்” என்கிறார்கள்.

    (ராபர்ட் கால்டுவெல், ஜே.எச்.ஏ திரமென்ஹீர் மற்றும் எட்வர்ட் ஜேவிட் ராபின்சன் போன்ற மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் )

    ReplyDelete
  9. “... Valluvars are believed to have been the priests of the Pallava kings before the introduction of Brahmins and for sometime after their arrival The exalted position of Valluvars in the social hierarchy during those times is indicated by inscriptions which refer to Valluvars in a respectful manner.Moreover, the Tamil saint Thiruvalluvar is believed to have been a member of this community. He has written the famous Tirukkural. and there is a subsect of Valluvars claiming descent from him … “

    தமிழாக்கம் : வள்ளுவர்கள் (பறையர் பூசகர்கள்) பிராமணர்களின் அறிமுகத்திற்கு முன்னரும் அதன் பின் சில காலங்களும் பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர். சமூகப் படிநிலையில் வள்ளுவர்கள் மிகவும் மதிப்புக்குரிய குலமாக அக்காலத்தில் இருந்தனர் என கல்வெட்டுகள் கூறுகின்றன. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர்.

    ReplyDelete
  10. நூல் ஆதாரம் 02- : “Encyclopedia of Global Studies” (உலகளாவிய ஆய்வுகள் கலைக்களஞ்சியம்)
    “..Encyclopedia of Global Studies” “...பக்கம் 1290-ல் by Helmut K. Anheier, PhD, is President and Dean at the Hertie School of Governance, and holds a chair of sociology at Heidelberg University, Mark K. Juergensmeyer … “
    தமிழாக்கம் : பக்கம் 1290-ல் திருக்குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர் ஒரு பறையர் என குறிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  11. நூல் ஆதாரம் 03- : “Encyclopaedia Britannica” (கலைக்களஞ்சியம் பிரிட்டானிகா)
    The following is a description of "Paraiyars" originally appearing in Volume V20, Page 802 of the Encyclopaedia Britannica 1911.The name can be traced back to inscriptions of the 11th century, and the "Pariah poet," Tiruvalluvar, author of the Tamil poem, the Kurral, probably lived at about that time
    தமிழாக்கம் : 11ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் இருந்து “பறைய புலவர்” என அழைக்கப்படும் திருவள்ளுவர் அந்த காலகட்டத்திலேயே வாழ்ந்திருக்கலாம் என அனுமானிக்கலாம்.
    (குறிப்பு : பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது ஸ்காட்லாந்து அறிவொளியின் (Socttish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது.)

    ReplyDelete