Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Tuesday, October 30, 2012

Ilayaraja: The Bodhisatta of Music இசைபோதிசத்துவன் எம் இளையராஜாவின் இசைபெருவெளி!

http://www.facebook.com/sakya.mohan1?ref=tn_tnmn
இசைபோதிசத்துவன் எம் இளையராஜாவின் இசைபெருவெளி!
-சாக்ய மோஹன்-

கையில் அகப்படாத காற்றை 
கைப்பற்றும் உனது இசைப்பெட்டி

காற்றிலும் அகப்படாத செவ்வோசைகளை 
இழைக்கும் உனது விரல் லாவகம் 

நரம்பிசை தோலிசை ஓசைகள் நிசப்திக்க 
உனது கந்தர்வக் குரல் மட்டுமே மேலெழும் 
எங்கள் காதுகளில் செந்தமிழல்ல உனது குரல் தான் தேன் வார்க்கும்! 

உனது குரலிசையோடு 
நரம்பிசை தோலிசை இழைக்க 
உனது இசைவெளிப் பரப்பு 
விசாலமாய் விரிந்துகொண்டே போகிறது 
இன்னொரு பிரபஞ்சத்தின் திசையறியா நீலப் பெருவெளியாய் !

எமது இசை ராஜனே!
உனது ஸ்வரங்களுக்குள் கால் அரை சப்தமாமே 
அந்த சப்தத்தின் வெளியாய் நீயே இசைக்கிறாய் !
அந்த சப்தத்தின் ஊடே தான் உனது 
எல்லையற்ற பாட்டும் பயணிக்கிறது
எங்களையும் ஏற்றிய உனது பூதப்பேரூந்தில் !

உனது பறை இசையில் தான் 
இந்த இசை உலகம்
பறைந்துகொண்டது பல ஸ்வரங்கள் ஆயிரங்கள்!

சனாதன வெற்றுச் சங்கீதத்தை 
சர்வஜனத்திற்கும் மெருகூட்டிப் பங்கிட்ட உனது இசைக்கு  
எதிர்க்க வல்லது இந்த ஜாதிய மூர்க்க அன்றி 
வேறில்லை என்றறிவோம்!

இந்த ஜாதி தமிழ் சாக்கடை முடை நாற்றத்தில் 
முளைத்த மூர்க்கப் புலிகளுக்கு 
ஒரு பாட்டிசைத்தால் உனக்கு கனடாவில் இசைக்க வாய்ப்பாம்!

ஞான சூன்யர்களின் அடிமை வாசகம் அறியாத 
இசை இறை நீ! 
உனது இசைப்பெருவெளியின் 
முடிவிலா அழகில் மூழ்கி அலகிலா இன்புற 
பல கோடி ரசிகர்கள் இறைஞ்சுகிறோம்:
உலகத் துயர் துடைக்கும் உனது இசையால் 
மனிதத்தின்னிகளுக்கு இசைக்காதே 
இசைபோதிசத்துவனே!