Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Tuesday, March 27, 2012

"கொலைவெறி" பாடல் மீது தமிழரின் கொலைவெறி!

உலகின் பல்வேறு மொழிகளில் "கொலைவெறி" எனத் துவங்கும் திரைப்பட பாடல் ஒன்று உலகின் இசை அரங்குகளில் மக்கள் இசையாக அரங்கேறியது நினைவிருக்கலாம்.  தமிழும் ஆங்கிலமும் கலந்து இசைக் கூட்டியிருக்கும் இந்த பாடல் தமிழை கொலை செய்வதாக ஏற்கனவே பல 'தமிழிய'வாதிகள் எக்காளம் இட்டிருக்கும் நிலையில்.  தமது பங்கிற்காக விடுதலை சிறுத்தைகளும் தமிழை கொலை செய்வதாக எதிர்த்து இவர்களும் ஒரு "கொலை வெறி" பாடலை வெட்டிப் பாட இன்னொரு கொலைவெறி கொண்ட மூர்க்கத்தனமான தமிழ் பாடலை பாடி இருக்கின்றனர். இதற்கு தமிழ் நெறி அற நெறி எனச் சொல்லும்போது சிரிப்புதான் வருது. 

முதலில் தமிழுக்கு ஜாதியையும் அதை அடியொற்றிய மதத்தையும் தவிர நெறி என்று ஒன்று உண்டா? அப்படியே இருந்தாலும் புத்த மதம் கொடுத்த அறம் எனும் நெறி தான் இருக்க வேண்டும்.  மேலும் அறம் என்பது தமிழ்வயப் படுத்தப்பட்ட "அறஹத்துகளின்' அதாவது பாலி மொழி வழி தமிழுக்குள் விளைந்த அற நெறிதானே ஒழிய, தமிழுக்கென இருக்கும் அற நெறி ஹிந்து ஜாதி அறம் தான் என்றால் மறுப்பதற்கு ஏதும் இல்லை.  கொலைப்பழி வாங்கும் மனிதத் தின்னிகளே அதாவது தமிழியம் பேரில் ரத்தக் களம் கண்ட புலிகளும், தலித் குடிகளை கழுத்தறுத்துக் கொல்லும் தமிழ் ஜாதிகளின் கொலைப்பாதகமே அற நெறியாம்.  தலித் குடிகளின் பெண்டுகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் பாதகம் தான் தமிழர் அற நெறி.  கள்ளுண்டு காம வெறி கொண்டு பொய்மெய்யுறும் களவாணித்தனம் மிகு கொலைப்பாதகம் செய்யும் பஞ்சமாப்பாதகங்கள் அனைத்தும் மற்ற மொழி பேசும் ஹிந்துக்களைப் போலத்தான் தமிழரும் பஞ்ச சீலங்கள் அற்று வாழ்கிறார் எனபதே உண்மை.  

ஏதோ ஒரு பாட்டை உலகமே அந்தந்த மொழிகளில் பாடி கொண்டாடுவதை ரசிக்க வழியின்றி, "தமிழு... தமிளு" என மொழிவெறி ஏ....ன்?  பாடுங்கள் சமூக விடுதலை பாடல்.  உள்வாங்குவோம் விழிப்படைவோம்.  மொழிவாழ மானுடம் அழிந்ததுதான் மிச்சம்.  மொழி வெறி வேண்டாம்.  மொழியில் மானுடம் சேர்த்து, புத்தரின் தம்மம் பரவ அதாவது "அற நெறி" பரவி ஹிந்துக்களின் கொலை வெறி அடங்கும் களப் பறையர் வளர்த்தெடுத்த அற நெறியை மீண்டும் தமிழில் மீட்டெடுங்கள் அடுத்த மொழிக்காரரையும் கொலைப்பாதகம் செய்யாமல். உங்கள் மொழியில் மானுடத்தை சேர்த்து சேரி என்றும் ஊர் என்றும் பிரித்து அசிங்கம் பேசும் சூத்திர வெறியை ஒழிக்க அற வழியில் போராடுங்கள் இந்தியாவின் எல்லா மாந்தருக்கும் பயனுறும் வகையில்! உங்களுக்கு அற நெறி பாடல் வேண்டுமானால் நிறைய கவிஞர் இருக்கிறார்கள்! மொழி வெறி இல்லாமல் "அற நெறி'யோடு அணுகுங்கள்!

Sunday, March 25, 2012

தகர்ந்துபோன புலிகளின் ஹிந்து சாம்ராஜ்ஜிய கனவும் சிறுத்தை தலைவரின் தகர்ந்துபோகும் தமிழ்-தேசிய கனவும்

தலித் குடிகளைப் பொறுத்தவரையில், திருமாவுக்கு மாற்று தேவை இல்லை என்பதை திருமாவளவன் தான் உணரவேண்டும்.  தன்னுடைய ஜாதி-ஹிந்துடத்தில் திடமாய் இருந்து நல்லவேளைத்யாக வீழ்ந்த புலி-ஆதரவு போக்கையும், ஜாதி ஒழிப்பில் ஒரு இமி அளவும் பிரயோஜனம் இல்லாத தமிழ்-மொழியியம் அடியொற்றிய பொதுபுத்தி போக்கையும் கைவிடும் நோக்கம் ஏதும் இல்லாத நிலை தலித் விடுதலை கருத்தியலார் மத்தியில் மிகுந்த கவலை ஏற்படுத்தியிருப்பதை திருமாவளவன் உதாசீனப் படுத்துகிறார்.  ஒட்டுமொத்த தமிழ்நாட்டு தலித் குடிகள் குறைந்தது 50 சதவீதமாவது நிலம் வைத்துக்கொண்டு நீருக்காக ஏங்கி இருக்கையில், முல்லை பெரியாறு போன்ற போராட்டம் பயனுள்ளது என்று சொல்லலாம். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல், 99.99  சதவீதம் முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நீர் பகிர்வு போராட்டங்கள் எல்லாம் தமிழகத்தைப் பொறுத்த வரையில், தமிழராகிய சூத்திர ஜாதிகளுக்கே பயன்படக்கூடியது.  ஆயிரக்கணக்கிலான ஒதுக்கப்பட்ட தலித் சேரிகளின் நீர் இறையாண்மை குறித்த எந்த அரசியலும் தெரியாதவரா திருமாவளவன்? 

அடுத்து, புலி ஆதரவு போராட்டம் என்பது ஒட்டுமொத்த இலங்கை தலித் குடிகளுக்கே எதிரானது.  புலி-ஆதரவு போராட்டம் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான இசுலாமியருக்கும் எதிரானதே.  இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி உருவாவதற்கு காரணமே தமிழ் ஜாதிகள் தலித் மக்களை பன்றியினும் கீழாய் நடத்தும் வன் கொடுமையே.  இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் புலிகளால் கொல்லப்பட்ட நசுக்கப்பட்ட தலித் குடிகளே அதிகம் என்பதை இலங்கை வாழ் தலித் குடிகள் வெளியிடும் பதிவுகள் தெரிவிக்கின்றன. தமிழ் பேசும் இஸ்லாமியர் தொழுகைகளின் போது வெடித்து சிதறடிக்கப்பட்டது புலிக் கண்ணிகளால் தான் என்பதை இஸ்லாமியர் இன்றைக்கு தைரியமாக வெளியிடும் ஆதாரங்களில் அறிகிறோம். மற்றும் புலிகளின் ஜாதி-ஹிந்து வெறியோடு அவர்களின் சைவத் தமிழ் இனவாத லட்சியங்களையும் அலச வேண்டியிருக்கிறது.   பறையர், நளவர், பள்ளர், சக்கிலியர், பாவியர், கோவியர், சேவியர் என நீள்கிறது தமிழ் சமூகம் தலித் குடிகளை கீழ்மைப்படுத்தி பாதுகாக்கும் தீண்டாமை முகம். ஆனால், இதை சிறிதும் விமரிசன் செய்யாது, இந்திய பாராளுமன்றத்தில், இலங்கையில் ஹிந்துக்களின் கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும், ஹிந்துக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் திருமாவளவன் பேசி இருப்பது இவரின் சூத்திர ஜாதி ஹிந்து ஆதரவு நிலைப்பாட்டை நமக்கு தெரிவிக்கிறது.  இன்றைக்கும் தலித் குடிகள் தீண்டாமைக்கு எதிராக போராட முன்னெடுக்க முடியாத நிலையை இலங்கையில் உள்ள தமிழ் சமூக இழிநிலை.  டிஜிட்டல் யுகத்தில் ஜாதியை தூக்கிப் பிடிக்கும் தமிழருக்கு பொத்தாம் பொதுவாக ஆதரவு எனும் பேரில் புலிகளை இந்திய சேரிகளில் நுழைய விடும் அரசியல் கேடு தான் இன்றைய தமிழ் நாட்டு தலித் அரசியலின் போக்கு. 

ஜாதியும், மதமும், இதன்வழி ஏகிய வெறியொழுகும் தமிழ் (சூத்திர) பேரினவாதமும் கொண்டு கொழுப்புற்று வளர்ந்து பருத்த மூர்க்கரே புலிகள்!  இந்தியாவில் இருந்த ஆர்.எஸ்.எஸ்., சிவ சேனா போன்ற ஹிந்து புற அமைப்புகளின் துணை கொண்டு இலங்கையில் ஒரு வலுவான ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முயன்ற கொரில்லாக்களே விடுதலைப் புலிகள்!  இதன் வழி புத்தசமயத்தையும் இன்னபிற சமய கலாச்சார பேரழிவுகளையும் செய்துமுடிக்க புலிகள் உருவாயின என்றால் மிகையில்லை.  கொலைத் துப்பாக்கியும் தற்கொலை குப்பியும் புலிகளின் ஆயுதங்கள்.  உலகில் இதுவரை உருவான தற்கொலைப் படையில் மிகச் சிறந்ததாக பி.பி.சி. வானொலியால் ஒரு காலத்தில் சிறப்பாகப் பேசப்பட்ட பயங்கரவாதம் புலிகளின் போராட்ட வழி.  இறையாண்மை மிக்க இந்திய நாட்டின் பிரதமரைப் போன்று எண்ணற்ற மக்களை கொல்வதற்கு புலிகள் பயன்படுத்தியது ஒடுக்கப்பட்ட தலித் குடிகளை மனித வெடிகுண்டுகளாக!  உலகில் வேறெங்கும் காணாத அளவிற்கு பயங்கர சக்திவாய்ந்த மனித வெடிகுண்டுகளை புலிகளே தயாரித்தனர் எனலாம்.  ஒரு புறம் தமிழ் பேசும் இலங்கை வாழ் குடிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் மாயத் தோற்றத்தை பெற்றிருந்த புலிகள், இன்னொரு பக்கம் அம்மக்களை தமது சர்வாதிகாரத்தின் கீழ் நசுக்கியது கொடுமையினும் கொடுமை.  இஸ்லாமியரை கொலை வாங்கிய புலிகளுக்கு என்ன காரணம் இருந்திருக்கும் ஜாதி-ஹிந்து வெறியைத் தவிர.  புலிகள் என்றும் மனிதத்தின்னிகளே என்பதற்கு தமிழ் தேசியம் எனும் மாய அரசியலைப் பேசி தமிழ் பேசும் அப்பாவிகளை பாலி வாங்கிய ஹிட்லரிய சர்வாதிகார கொடுங்கோன்மையை விட வேறென்ன சாட்சியம் தேவை நமக்கு?  இஸ்லாமியர் வாழ்வியல் மட்டுமல்ல; அனைத்து இலங்கை குடிகளுக்கு புலிகள் செய்த கொடூர வன்கொடுமைகள் வெளி வருவது குறிப்பிடத்தக்கது. புத்த குடிகளை புலிகள் கொன்று குவித்தனர்; தமிழ் பேசும் மக்களையும் கேடயமாக்கி கொன்றனர் என்றாலும் நம்பாத புலி-ஆதரவு தமிழிய அரசியல்வாதிகள், இஸ்லாமியர் தொழுகையின் போதும் கொல்லப்பட்டனர் என செய்தி வருவதையும் புத்திஸ்டுகளின் சூழ்ச்சியால் வரும் செய்தி எனவும் கதைக்க வாய்ப்பு இருக்கிறது.  தமிழிய பேரினவாதம் ஜாதிவெறி மட்டுமல்ல; மதவெறியும் கூட்டிப் பெருக்கி வகுத்துக்கொண்டது என்பது இலங்கை வரலாற்றில் கொடுமைதான்!  வெறிகொண்டு போர்தொடுத்த சோழ ஜாதியருக்குப் பிறகு, இலங்கையில் கொலைக் களத்தை உருவாக்கியது புலிகளே.  இடைக்காலத்தில் ஹிந்து சாம்ராஜ்ஜியம் அமைக்க முயற்சித்த சோழர்களின் நொறுங்கிய கனவைப் போல், புலிகளின் ஹிந்து சாம்ராஜ்ஜிய கனவும் தகர்ந்தது! (விவரத்திற்கு படிக்க: சாக்ய மோஹன், "ஈழம்: எல்.டி.டி.இன் ஹிந்தத்வ முகாம் தலித் குடிகளை புறக்கணித்ததா? (2003)"

கண்ணை மூடிக்கொண்டு தமிழரை கவர முல்லையாற்று படுகைக்கு கால்நடைப் பயணம் என்பதெல்லாம், நமது இருளர் பெண்கள் தமிழ் காவலர்களால் பாலிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதற்கு செய்திருக்க வேண்டும் இந்த பாத யாத்திரையை!  புளியங்குடி படுகொலை நடந்த போது கழுத்தறுக்கப்பட்ட தலித் இளைஞர் பிணங்களை தோளில் சுமந்து பல கிராமங்களில் நியாயம் கேட்டு சிந்தனை செல்வன் தலைமையில் பாத யாத்திரை மேற்கொண்ட சிறுத்தைகள் எங்கே மறைந்து விட்டார்கள்? மொழி-இன தேசியம் எனும் பேரில்  தமிழ் புலிகள் விழுங்கிவிட்ட சிறுத்தைகள் தான் நம் கண் முன்னே சூத்திரர் அரசியலில் புதைந்து போயிருக்கின்றனர் என்பது வெட்கக்கேடானது.  புரட்சியாளர் புரட்சியாளர் என்று பேசி வளர்த்தெடுக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் கட்சி (DPI) விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று மாற்றப்பட்டது புலிகளை அடியொற்றி நின்று பாபாசாஹெப் அம்பேத்கரை புறந்தள்ளத்தானா?  இப்படி கேள்விகள் பல எழுப்புவதால் இணைய தளங்களில் சிறுத்தைகள் நம்மை எதிரியாக சித்தரித்தது இழி வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இருந்தும் நாம் மீண்டும் மீண்டும் திருமாவளவனை விமிரிசிக்க வேண்டிய அவசியத்தை புரிந்துகொண்டால் விளங்க வாய்ப்பிருக்கிறது.  திருமாவளவனின் தலித்-அல்லாதோர் அரசியல் போக்கு குறித்த நமது விமரிசனத்தை சூத்திரர் எதிர்கொள்வதையும், தலித் இளைஞர்கள் உள்வாங்குவதையும் நம்மால் உணரமுடிகிறது. இதை திருமாவளவன் உணர்வாரா என்பதே கேள்வி.  உணர்ந்தால் அவருக்கும் சூத்திரர் சூழ்ச்சியான தமிழ் தேசியத்திலிருந்து விடுதலை!   

Should Maya's Sarvajan Karuna shift back to Exclusive Bahujan Karuna?

Best wishes on the occassion of 78th Birth Day of Manyawar Sahab Kanshiramji!

Ajay Donre's "Time for Sarvajan to Bahujan" sent to AIM members explains a lot about the caste-ridden electoral drama in the largest Indian state UP. Ajay's wish is to pray to BSP leaders to "come back" to Bahujan projects and he has very strong reasons and fears of future of DAlit politics in the UP state. He points out one French observer Christophe who intensifies in his writings about "come back" of BSP to Kanshiramji's Bahujan ideography.BSP supremo Mayawati's shift from Bahujan to Sarvajan is what Samrat Asoka did in the history of democratization of Indian politics. When Napoleon Bonaparte worked on democracy, he saw his decline. This is not new to the French author Christophe who has opined his reasons for the ousting of Dalit as the head of the State. The French history has the record of how the middle class used the Napoleon's idea of democracy in the near future of Franch who imitated the Buddha and rephrased "liberty, equality and fraternity. Mayawati's attempt to democratize Indian politics is a unique factor in the history of India. She looked for a long-term peace to transform the caste-ridden society to a participatory democracy in which everyone is equal. Hers was not just a strategy to win the election but also an incredible philosophy to bridge the gap between societies. Mayawati showed her loving kindness to all citizens of the state and proved that if a Dalit comes to power everyone enjoys equality of sharing the power and welfare. No Brahaman or a brahmanic Sudra will tolerate the social iconography that “the Dalit-ki-beti” dedicated to the world of Oppressed. She is the first to modernize the state availing possible facilities. From the colonial hindu leader Mohandas Gandhi to the present hindu leaders, urbanization is an “untouchable” word because, if people, places and things are getting urbanized, the caste will mislay its foundation and then you can’t find the difference between feudal lords and slaves of caste hindu society. Mayawati has broken the ribs of caste hegemonists. She has proved that “the Dalit” is always a democratic phrase serving for the good of the people. We can’t support Christophe’s observation of Mayawati’s shifting from Dalit politics to “sarvajan” which might have led her to concentrate more on common minimum programs expected by the “other” communities too. Not even during Babasaheb Ambedkar’s times a Brahman prostrated to a Dalit politician. It has happened just because Maya’s incredible inclusive politics. It is the caste-prejudice of dominant sudra castes and so-called 11 per cent Brahman castes who do not tolerate a Dalit to be the head of the state.

Moreover, we can also deny the wronged political image given to the Brahmans of UP who were projected that they largely voted to BSP so that the party could win the election with full majority. Brahmans who chose to vote to BSP were not more than the Muslims who had valid reason to support BSP. Brahmans who got elected on BSP ticket was due to over 20 percent of Dalit vote and no way could they win with just 3 to 4 per cent of vote they extended to BSP. It was true that Mayawati was chosen to head the state because she had raised BSP the real political force where politically homeless Brahmans could get accommodated. Even the Muslim support was not radical because they feared of BJP. The electoral message in 2012 is that Muslims are no way a standard supporters of BSP but their votes decide the successful state politics. Muslims are taught to be envious to “infidelity” and image worship and the social iconography of Mayawati will no way help Muslim for furthering social mosaic. More than parks and perks of ‘unavoidable’ corruption, the installation of statues are implicit “unattractions” not only to caste-hindus also to Muslims. However, it is not a surprise that like any other states in caste-ridden India, Dr. Babasaheb Ambedkar’s statues will be a threat to caste hegemonists. I agree that any dilution of Ambedakrism will ruin Dalit politics at least for the next century. But I don’t agree with BAMSEF cadres’ ‘mulnivasi’ statement that shift from Kanshiram’s social design of Bahujan to Mayawati’s ‘sarvajan’ was the electoral debacle for BSP in the recent sudra-brahman stooges-ridden UP election 2012. Amidst goofing SP, BJP, Congress political turmoil and monstrous caste situation, Mayawati has tried her level best to complete five year term for the first time in the history of UP state assembly and she proved that she is a charismatic leader and I would say she is more than her mentor. The anti-incumbency wave yielded a short-lived rein for ‘pseudo-samajwadis’. BSP with its inclusive politics will soon resume its social-political affirmative activities.

I have a concluding point that “mulnivasi” BAMSEF will have to give up its pro-sudra critics on Mayawati’s inclusive politics that in fact reduced the atrocities done to Dalits in the state. In states like Maharashtra and Tamil Nadu, the Dalit leaders have no any sign of any sunshine for Dalit politics in the near past or present and the leaders are either finding asylum in caste-politics or in lingo-ethnocentric bedlam. Mayawati is not diluting Ambedkarism like Thirumavalavan who is unnecessarily holding the imaginary Tamil-tail of "dead-tiger" and turning Ambedkar Nagars into "Tamil colonies" describing himself as "Ezhuchchi Thamizhar" which means nothing but useless "Rebel Tamilist" nonidentical with the Dalits and Tribal people of the state. When you move to the political degrees of comparison, Maya is the presiding deity at least for the next decade in the Path of Babasaheb Ambedkar and The Buddha.