உலகின் பல்வேறு மொழிகளில் "கொலைவெறி" எனத் துவங்கும் திரைப்பட பாடல் ஒன்று
உலகின் இசை அரங்குகளில் மக்கள் இசையாக அரங்கேறியது நினைவிருக்கலாம்.
தமிழும் ஆங்கிலமும் கலந்து இசைக் கூட்டியிருக்கும் இந்த பாடல் தமிழை கொலை
செய்வதாக ஏற்கனவே பல 'தமிழிய'வாதிகள் எக்காளம் இட்டிருக்கும் நிலையில்.
தமது பங்கிற்காக விடுதலை சிறுத்தைகளும் தமிழை கொலை செய்வதாக எதிர்த்து
இவர்களும் ஒரு "கொலை வெறி" பாடலை வெட்டிப் பாட இன்னொரு கொலைவெறி கொண்ட
மூர்க்கத்தனமான தமிழ் பாடலை பாடி இருக்கின்றனர். இதற்கு தமிழ் நெறி அற நெறி
எனச் சொல்லும்போது சிரிப்புதான் வருது.
முதலில் தமிழுக்கு ஜாதியையும் அதை அடியொற்றிய மதத்தையும் தவிர நெறி என்று ஒன்று உண்டா? அப்படியே இருந்தாலும் புத்த மதம் கொடுத்த அறம் எனும் நெறி தான் இருக்க வேண்டும். மேலும் அறம் என்பது தமிழ்வயப் படுத்தப்பட்ட "அறஹத்துகளின்' அதாவது பாலி மொழி வழி தமிழுக்குள் விளைந்த அற நெறிதானே ஒழிய, தமிழுக்கென இருக்கும் அற நெறி ஹிந்து ஜாதி அறம் தான் என்றால் மறுப்பதற்கு ஏதும் இல்லை. கொலைப்பழி வாங்கும் மனிதத் தின்னிகளே அதாவது தமிழியம் பேரில் ரத்தக் களம் கண்ட புலிகளும், தலித் குடிகளை கழுத்தறுத்துக் கொல்லும் தமிழ் ஜாதிகளின் கொலைப்பாதகமே அற நெறியாம். தலித் குடிகளின் பெண்டுகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் பாதகம் தான் தமிழர் அற நெறி. கள்ளுண்டு காம வெறி கொண்டு பொய்மெய்யுறும் களவாணித்தனம் மிகு கொலைப்பாதகம் செய்யும் பஞ்சமாப்பாதகங்கள் அனைத்தும் மற்ற மொழி பேசும் ஹிந்துக்களைப் போலத்தான் தமிழரும் பஞ்ச சீலங்கள் அற்று வாழ்கிறார் எனபதே உண்மை.

ஏதோ ஒரு பாட்டை
உலகமே அந்தந்த மொழிகளில் பாடி கொண்டாடுவதை ரசிக்க வழியின்றி, "தமிழு... தமிளு"
என மொழிவெறி ஏ....ன்? பாடுங்கள் சமூக விடுதலை பாடல். உள்வாங்குவோம்
விழிப்படைவோம். மொழிவாழ மானுடம் அழிந்ததுதான் மிச்சம். மொழி வெறி
வேண்டாம். மொழியில் மானுடம் சேர்த்து, புத்தரின் தம்மம் பரவ அதாவது "அற
நெறி" பரவி ஹிந்துக்களின் கொலை வெறி அடங்கும் களப் பறையர் வளர்த்தெடுத்த அற
நெறியை மீண்டும் தமிழில் மீட்டெடுங்கள் அடுத்த மொழிக்காரரையும்
கொலைப்பாதகம் செய்யாமல். உங்கள் மொழியில் மானுடத்தை சேர்த்து சேரி என்றும்
ஊர் என்றும் பிரித்து அசிங்கம் பேசும் சூத்திர வெறியை ஒழிக்க அற வழியில்
போராடுங்கள் இந்தியாவின் எல்லா மாந்தருக்கும் பயனுறும் வகையில்! உங்களுக்கு
அற நெறி பாடல் வேண்டுமானால் நிறைய கவிஞர் இருக்கிறார்கள்! மொழி வெறி
இல்லாமல் "அற நெறி'யோடு அணுகுங்கள்!
No comments:
Post a Comment