Hell of caste in Hinduism

Hell of caste in Hinduism
Savi Savarkar's painting on caste monsters

Monday, November 24, 2014

ஜாதி ஒழிப்பில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இடம் பெறாதது ஏனோ?

--சாக்ய மோஹன்--
"தி ஹிந்து" பத்திரிகையில் பேராசிரியர் ரணஜித் குஹாவின் ஜாதி ஒழிப்பில் காந்தி-அம்பேத்கர் குறித்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு வாசகர், //"இவரு ஏன் பெரியாரை விட்டுட்டாரு? அவரு சாதி ஒழிப்பு செய்யலையா? ஒருவேளை தலித் விடுதலைக்க் அவர் வேலை செய்யலையா? ..இவரு என்ன ஆராய்சியாளறு?"// என கேள்வி கேட்டிருக்கிறார். இவருக்கும் பல ராமசாமியவாதிகளுக்கும் நமது பதிலையும் பதிவு செய்யலாம்.

"பெரியார்" என பட்டம் கொடுத்ததே அன்னை மீனாம்பாள் எனும் தலித் தலைவர்தான். அதுவரை அவர் "ராமசாமி நாயக்கர்" என்றுதான் அழைக்கப்பட்டார். ஜாதி ஒழிப்பில் வெறும் பிராமணர்-எதிர்ப்பை மட்டுமே முன்னிறுத்தி "சூத்திரர்" எனும் கீழிறக்கப்பட்ட இழி-ஜாதிக்காக மட்டுமே போராடியவர் என்பதால் ஜாதியத்தின் ஆணிவேரான பிராமணியத்தை எதிர்க்காமல் 'சூத்திரர் சுப்ரீமசி' எனும் "சூத்திரர் மட்டுமே" ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அரசியலை செய்து அதில் வெற்றி பெற்றனர். சூத்திரரோடு போராடிய ஜாதியற்ற தலித் குடிகளை அதிகார பகிர்வில் சேரவிடாமல் அகற்றிவிட்டனர். இதனால், .வே.ராமசாமியின் ஜாதி ஒழிப்பு வெறும் பிராமணர் ஒழிப்பும் தலித் குடிகளின் கீழிரக்கமும் தான் நடந்திருக்கிறது. இது ஜோதிராவ் பூலே மற்றும் ஸ்ரீ நாராயணகுரு போன்ற பிற்பட்ட ஜாதி எழுச்சிக்கு போராடிய அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். அண்ணல் அம்பேத்கர் தனது "ஜாதி அழித்தொழிப்பு" எனும் நூலே ஒட்டுமொத்த ஜாதி ஹிந்துக்களுக்காகவே எழுதினார் எனபது குறிப்பிடத்தக்கது. ஹிந்துஇசம் உள்ளவரை ஜாதி இருக்கும் என ஆய்ந்தறிந்த புத்தரை போலவே அண்ணல் அம்பேத்கரும் மதமாறினார். ஈவேரா ஹிந்துவாகவே இருந்தார்.

அண்ணல் அம்பேத்கர் ஜாதியற்ற ஒரு போதிசத்துவராக இருந்து ஜாதி எனும் மனநல வியாதியை ஜாதி ஹிந்துக்களிடம் இருந்து நீக்க வாழ்நாள் முழுவதும் போராடினார். காந்தியும் ஈவேராவும் ஹிந்துயிசத்துக்குள்ளே இருந்து ஜாதி ஒழிக்காமல் குறிப்பிட்ட ஜாதிகளின் உயர்ச்சிக்காகவும் நடந்திராத ஜாதிய-சமநிலைக்காகவும் போராடினர். ஒரு சூத்திரராக இருந்து ஈவேரா காந்தியை (நான்கு வர்ணாஸ்ரம மனுஸ்மிருதியை) எதிர்த்தார்; அண்ணல் அம்பேத்கரோ ஒரு ஜாதியற்றவராக ஒட்டுமொத்த ஜாதிய கட்டமைப்பை அழித்தொழிக்க காந்தியின் 'ராம ராஜ்ஜியமான" வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தார். ஈவேரா வர்ணாஸ்ரமத்தை பிரயோகித்த பிராமண-ஷத்திரியரை எதிர்த்தார்; அம்பேத்கரோ தனிமனிதரை எதிர்க்காமல் ஜாதியின் அடிக்கருத்தியலான ஹிந்தத்வத்தையும், மனுஸ்மிருதியையும் ஒழிக்க பாடுபட்டார். அதற்காக இந்திய அரசியல் சாசனத்தையே ஒரு ஜாதி ஒழிப்பு பட்டயமாக நமக்கு தந்திருக்கிறார். இந்திய அரசியல் சாசனம் மனுஸ்மிருதிக்கு முற்றிலும் முரணானது. தீண்டாமை எனும் வன்கொடும் வழக்கம் உருவாக பிராமணரோடு சூத்திரற்கும் பங்கு இருக்கிறது எனபதை தோலுரித்து காட்டியவர் அம்பேத்கர். ஜாதி அழித்தொழிப்பு நூலை வாசித்தால் மட்டுமே தனது உரையில் 'பெரியார்' என அறியப்படும் ராமசாமி நாயக்கரை ஜாதி ஒழிப்பில் பேராசிரியர் ரணஜித் குஹா சேர்க்க வாய்ப்பில்லை என்பது புரியும்.

ஏற்கனவே நாம் கடலளவு இது குறித்து எழுதிவிட்டோம். தேவையானால் மேலும் விவாதிக்கலாம்.



No comments:

Post a Comment